குற்றாலநாத சுவாமி கோவில் தேரோட்டம்
குற்றாலநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தென்காசி
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. இந்த தேர்கள் ரத வீதியை சுற்றி சுமார் 11 மணிக்கு நிலையத்தை அடைந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை இழுத்தனர். வருகிற 15-ந் தேதி காலையிலும், இரவிலும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ந் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. இறுதி நாளான 18-ந் தேதி ஐப்பசி விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story