குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்
கொளுத்தும் வெயிலிலும் குற்றாலம் மெயின் அருவியில் விழும் குறைவான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
கொளுத்தும் வெயிலிலும் குற்றாலம் மெயின் அருவியில் விழும் குறைவான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். சில வருடங்களில் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியுள்ளது.
அப்போது சாரல் மழை பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து வெயில் கொளுத்தியதால் அருவிகளில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது.
நேற்று மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் ஆண், பெண் சுற்றுலா பயணிகள் தனித்தனியாக குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.