காரை சரியாக சர்வீஸ் செய்யாததால் மன உளைச்சல் - இழப்பீடு வழங்க தனியார் கார் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவு
காரை சரியாக சர்வீஸ் செய்யாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு, தனியார் கார் சேவை நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
காரை சரியாக சர்வீஸ் செய்யாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு, தனியார் கார் சேவை நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த முருகப்பன் என்பவர், சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனியார் கார் ஷோரூமில் 40 லட்ச ரூபாய்க்கு வாங்கிய காரில், டேஷ் போர்டில் அடிக்கடி சத்தம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பலமுறை வலியுறுத்தியும் சரியாக சர்வீஸ் செய்யவில்லை என்றும், தொடர்ந்து சத்தம் எழுந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனியார் கார் நிறுவனம் 16 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, வாடிக்கையாளருக்கு கார் நிறுவனமும், விற்பனை ஷோரூம் நிறுவனமும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ 7 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.