ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் பள்ளிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பள்ளிபாளையம்
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தியது செல்லும் என்றும், 2 தலைவர்களும் சேர்ந்து செயல்பட உத்தரவிட முடியாது என்றும் தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் அ.தி.மு.க.வினர். முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி, ஒன்றிய செயலாளர் செந்தில், தொகுதி செயலாளர் சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, ஆலாம்பாளையம் நகர செயலாளர் செல்லதுரை, டி.சி.எம்.எஸ். தலைவர் திருமூர்த்தி, ஆனங்கூர் ஊராட்சி தலைவர் சிங்காரவேலு, புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, கலியனூர் ஊராட்சி தலைவர் ரவி, பள்ளிபாளையம் நகர துணைச்செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் ஒன்றிய, நகர கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல், ராசிபுரம்
அதன்படி நாமக்கல்லில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர செயலாளருமான கே.பி.பி.பாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வாகன ஓட்டிகளுக்கும், பஸ் பயணிகளுக்கும் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் மயில் என்கிற மயில்சுதந்திரம், ஒன்றிய செயலாளர்கள் கோபி, ராஜா, நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
ராசிபுரத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கதர்கடை அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.கந்தசாமி, முன்னாள் நகர செயலாளர் ராமசாமி, நகர பொருளாளர் வெங்கடாஜலம், நகர அவைத்தலைவர் கோபால், நகர துணை செயலாளர் வாசுதேவன், வக்கீல் பூபதி, மாவட்ட பிரதிநிதிகள் ஜெகன், சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அமல்ராஜ், சின்னபையன், பெரியூர் குமார், ஒப்பந்ததாரர் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர், குமாரபாளையம்
பரமத்தியில் அ.தி.மு.க. சார்பில் பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் தனசேகரன், பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார், வேலூர் நகர செயலாளர் பொன்னிவேல், வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜ் மற்றும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பொத்தனூரில் நகர செயலாளர் நாராயணன் தலைமையிலும், வெங்கரையில் பேரூராட்சி தலைவர் விஜி என்ற விஜயகுமார் தலைமையில், துணை தலைவர் ரவீந்தர் முன்னிலையில் இனிப்பு வழங்கினர்.
குமாரபாளையத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் தரணிதரன் தங்கமணி, அ.தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.என்.பழனிச்சாமி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாஸ்கரன், முன்னாள் நகர செயலாளர் குமணன், கவுன்சிலர் புருஷோத்தமன், நகர துணை செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி அர்ஜூனன், கோபாலகிருஷ்ணன், சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமையில் நகர செயலாளர் அங்கமுத்து உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்லப்பன், நகராட்சி உறுப்பினர்கள் ராஜவேலு, மல்லிகா, ராஜா, வழக்கறிஞர் அணி, மாவட்ட பொருளாளர் வக்கீல் பரணிதரன், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழ.ராமலிங்கம், நகர வங்கித்தலைவர் ராமமூர்த்தி, முன்னாளர் தொகுதி இணை செயலாளர் முரளிதரன், ராகவன் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.