தென்காசி நகராட்சி ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் புகார் மனு
ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி நகராட்சி ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர்.
தென்காசி
தென்காசி நகராட்சி துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா தலைமையில் கவுன்சிலர்கள் வசந்தி, உமா மகேஸ்வரன், கல்பனா, ராமசுமதி, சங்கர சுப்பிரமணியன், சீதாலெட்சுமி, லெட்சுமண பெருமாள், ரபீக், சுனிதா முத்து, பொன்னம்மாள் உள்பட 21 கவுன்சிலர்கள் நேற்று நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதியிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதில் தென்காசி நகராட்சியில் பணியாற்றும் ஊழியர் புதிய வரி விதிப்பு செலுத்துபவர்களுக்கு அதிகப்படியாக லஞ்சம் கேட்டு பொதுமக்களிடம் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து வருகிறார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story