ரூ.37 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.37 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் பிடி ரகம் பருத்தி 905 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 99 முதல் ரூ.8 ஆயிரத்து 325 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.
இதேபோல் எள் 50 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தது. கருப்பு எள் கிலோ ரூ.152 முதல் ரூ.166 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.140 முதல் ரூ.171 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.140 முதல் ரூ.171 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story