ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம்
x

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது

தஞ்சாவூர்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தஞ்சாவூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முருகானந்தம் தலைமையிலும், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி, மேற்பார்வையாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையிலும் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 2722 லாட், சுமார் 5670 குவிண்டால் பருத்தி விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. 15 வியாபாரிகள் மற்றும் கோவையில் உள்ள இந்திய பருத்தி கழகத்தினர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.4 கோடி ஆகும். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ.9800 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.8129 ஆகவும், சராசரி மதிப்பு ரூ.8869 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.







Next Story