ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம்
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
தஞ்சாவூர்
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தின் மூலம் தரகர் தொல்லையின்றி பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்படி நேற்று முன்தினம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூர் விற்பனைக்குழு மூலம் நடைபெற்ற இந்த ஏலம் கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்றது.
ரூ.4 கோடிக்கு ஏலம்
இதில், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட 5,600 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மறைமுக ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 399-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 269-க்கும் ஏலம் போனது. சராசரியாக ரூ.8 ஆயிரத்து 899-க்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது. சுமார் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story