குடவாசலில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,389-க்கு பருத்தி ஏலம்
குடவாசலில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,389-க்கு பருத்தி ஏலம் போனது.
குடவாசலில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,389-க்கு பருத்தி ஏலம் போனது.
பருத்தி ஏலம்
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் சரசு முன்னிலை வகித்தார். குடவாசல், மஞ்சக்குடி, மேலப்பாலையூர், இலையூர், செல்லூர், புதுக்குடி, சேங்காலிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை கும்பகோணம், பண்ருட்டி, விருதாச்சலம், கோவை, செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மறைமுக ஏலம் முலமாக வாங்கினர்.
அதிகபட்ச விலை
இதில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,389-க்கு ஏலம் போனது. குறைந்த பட்ச விலையாக ஒரு குவிண்டால் ரூ.9,769-க்கும், சராசரியாக ரூ.10,679-க்கு ஏலம் விடப்பட்டது. பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் செய்திருந்தார்.