அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x
தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:46 PM GMT)

அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த நபர் குறித்து விசாரித்தார். மேலும் இது குறித்து அவர் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story