தூத்துக்குடியிலுள்ள கடைகளில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியிலுள்ள கடைகளில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியிலுள்ள கடைகளில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கும் மஞ்சப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள், டீக்கப்புகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து மாநகர நல அலுவலர் சுமதி தலைமையில் சுகாதார அலுவலர்கள் ஹரிகணேசன், ராஜசேகர், ராஜபாண்டி மற்றும் அலுவலர்கள் நேற்று பழைய மாநகராட்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

பிளாஸ்டிக் பறிமுதல்

அந்த பகுதிகளில் உள்ள 36 கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கடைகளில் இருந்த சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள், டீக்கப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து உள்ளனர். இதே போன்று ஒருகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கடையில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது போன்ற ஆய்வுகள் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story