செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால். பொது சுகாதாரத்துறையின் முலம் தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தொற்றில் இருந்து பாதுகாக்கவும், மீண்டும் பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கொரோனா தடுப்பூசி மருந்தே கொரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மை கேடயம்.

இதனை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி அவரவர் வசிக்கும் பகுதிகளில் எளிதில் கிடைத்திடும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

இதர நாட்களிலும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 91 சதவீதம், 2-வது தவணை 75 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி 22 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

எனவே. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்கள். 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட முத்த குடிமக்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி. கொரோனாதொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story