அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்தது. மேலும் இரண்டு தவனை தடுப்பூசி கட்டாயம் என்றும் அறிவித்தது.
இதனை தொடர்ந்து தற்போது அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே வீரர்கள் போட்டியில் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.