சேலம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது ஒற்றை இலக்கு எண்ணில் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 3 பேர், சேலம் ஒன்றியத்தில் ஒருவரும், ஆத்தூரில் ஒருவரும், சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 2 பேரும், தர்மபுரி மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story