குமரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா


குமரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
x

குமரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இது அடுத்தக்கட்ட அலைக்கான அறிகுறி என சுகாதாராத்துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த தமிழக அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று பரிசோதனையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் 369 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று 301 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதியானது. அதாவது கிள்ளியூர் தாலுகாவில் 2 பேரும், முன்சிறை பகுதியில் 3 பேரும், திருவட்டார் பகுதியில் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்த அனைவரும் வீட்டு தனிமையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

----

----

Reporter : K Vibin Rajesh Kumar_Staff Reporter Location : Nagercoil - Nagercoil


Next Story