சேலம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 14 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று ஒருவருக்கு கூட நோய் தொற்று ஏற்படவில்லை.
அதேசமயம், தாரமங்கலம், ஓமலூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், சேலம் மாவட்டத்திற்கு கோவையில் இருந்து வந்த 3 பேருக்கும், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்த வந்த தலா 2 பேருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story