போலீசார் கொடி அணிவகுப்பு
பேராவூரணியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்
பேராவூரணி;
பேராவூரணியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். கொடி அணி வகுப்பு ஊர்வலத்துக்கு தஞ்சாவூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகான் முன்னிலை வகித்தார். பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, பாப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேராவூரணி அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் வரை சென்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
Related Tags :
Next Story