ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும்பொருட்களை போலீசார் ஆய்வு
மயிலாடுதுறையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீசார் ஆய்வு
மயிலாடுதுறை அருகே சித்தர்க்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு ரேஷன் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரிகளை மயிலாடுதுறை மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
பொருட்கள் விவர பட்டியல்
அப்போது பொருட்கள் ஏற்றிசெல்லும் லாரியில் பொருட்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை ஆய்வு செய்தனர். மேலும் பொருட்களை முறையாக ரேஷன்கடைகளுக்கு கொண்டு சென்று சேர்க்க அறிவுறுத்தினர். இதைப்போல மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் குடோனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரேஷன் பொருட்கள் சரியாக இறக்கப்பட்டுள்ளதா? என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர்.