கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று தென்மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நஷ்டத்துக்கு கொண்டு செல்லும் பல்நோக்கு சேவை மையம் 'எம்.எஸ்.சி. மற்றும் ஏ.ஐ.எப்.' திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிட வேண்டும். ஊதியக்குழு அறிக்கையை பெற்று விரைவில் சம்பள உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நடராஜன், நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலமுருகன், பொருளாளர் கணேசன், தென்காசி மாவட்ட தலைவர் சித்திரை, செயலாளர் காளிதாசன், பொருளாளர் சண்முகச்சாமி, நெல்லை மாவட்ட துணைத்தலைவர்கள் நடராஜ கண்ணன், முருகேசன், இணை செயலாளர்கள் வீரியப்பெருமாள், மாரியப்பன், போராட்டக்குழு தலைவர் பரமசிவன், செயலாளர் சந்திரலால், ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் பால்ராஜ் உள்பட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.



Next Story