தொடர் கனமழை எதிரொலி; வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
யானைக்கல் தரைப்பாலம், ஆரப்பாளையம் தரைப்பாலம் உள்ளிட்ட இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மதுரை,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை தனது முழு கொள்ளளவான 70 அடியை நேற்று இரவு எட்டியது. இதையடுத்து வினாடிக்கு 7,574 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் யானைக்கல் தரைப்பாலம், ஆரப்பாளையம் தரைப்பாலம் உள்ளிட்ட இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், செல்பி எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் சிம்மக்கல் தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்ததால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வெள்ளநீரில் வாகன ஓட்டிகள் செல்லும் நிலையில், ஆற்றில் சிக்கித்தவித்த குதிரை மற்றும் காளையை மாநகராட்சி ஊழியர்கள் மீட்டனர்.
Related Tags :
Next Story