தென்மாவட்டத்தில் தொடர் கனமழை: மீட்பு பணியில் கடலோர காவல்படை
இந்திய கடலோர காவல்படை மூலம் 6 பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை,
தென் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்து போன்ற நிவாரண பொருட்களை வழங்கவும் இந்திய கடலோர காவல்படையின் உதவியை தமிழ்நாடு அரசு கோரி உள்ளது.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படை மூலம் 6 பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி கடல் மற்றும் கடலோர பகுதிகளை கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து கப்பல் கண்காணித்து வருகிறது. துடுப்பு படகுகள், விசைப்படகுகள் கொண்ட மீட்பு நீர் மூழ்கி குழுவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி வசவப்பபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.
Related Tags :
Next Story