தொடர் விடுமுறை எதிரொலி: விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல ஆயிரக்கணக்கில் திரண்ட சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை எதிரொலி: விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல ஆயிரக்கணக்கில் திரண்ட சுற்றுலா பயணிகள்
x

விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலா பயணிகள், சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கன்னியாகுமரி,

தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள், சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு குழாம் திக்குமுக்காடியது. புத்தாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story