நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்


நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்
x
தினத்தந்தி 26 Sept 2023 3:15 AM IST (Updated: 26 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

தமிழ்நாடு, புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பு (பெட்காட்) சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் கோத்தகிரியில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் குமரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரங்கராஜ், துணைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், லட்சுமி, கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில துணை செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். தொடர்ந்து குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்வது, நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மனித-வனவிலங்கு மோதல்கள், பயிர்கள் சேதம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வனவிலங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நீலகிரி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


Next Story