ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 225 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தின்போது கிராம ஊராட்சிகளின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தென்மேற்கு பருவமழை, சீமைகருவேல மரங்கள் அகற்றம், அடிப்படை வசதி மற்றும் மின்கட்டணம், குடிநீர் கட்டணம், நிலுவை செலுத்துதல், பொது திறவிட பகுதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல், சிறந்த அருமை கொண்ட ஊராட்சி, பெண்கள் நேய ஊராட்சி, சுகாதாரம் மற்றும் பசுமை ஊராட்சி, குழந்தைகள் நேய ஊராட்சி போன்ற 9 கருப்பொருள் மற்றும் இலக்கை அடைவது ஆகியவை குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
2-ம் கட்டமாக
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மீதம் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் 2-ம் கட்டமாக விரைவில் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.