ஜனாதிபதி வருகையையொட்டி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை
ஆகஸ்ட் 6ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை தருகிறார்.
சென்னை,
வருகிற ஆகஸ்ட் 6ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை தருகிறார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
விழாவில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், தரவரிசையில் சிறந்த இடம் பிடித்த மாணவ-மாணவிகள் பட்டங்களுடன், விருதுகள் மற்றும் பரிசுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பெற இருக்கின்றனர்.
விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இணை வேந்தரும், உயர்கல்வி துறை அமைச்சருமான க.பொன்முடி, பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், காவல் உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.