கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று, கோடைமலை அம்பேத்கர் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலஉரிமை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பூம்பாறை கிளை தலைவர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். சங்க தலைவர் அழகுசிவகாமி, துணை தலைவர் வேளாங்கன்னி, பொருளாளர் கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரேமாதிரி சலுகை வழங்க வேண்டும். பூம்பாறையில் அருந்ததியர் மக்களுக்கு வீடுகள், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story