கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

வெள்ளமடம் அருகே மனைவி கோபித்து தாயார் வீட்டுக்கு சென்றதால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

வெள்ளமடம் அருகே மனைவி கோபித்து தாயார் வீட்டுக்கு சென்றதால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

வெள்ளமடம் அருகே ஆதித்தபுரம் காந்திநகரை சேர்ந்தவர் சுதன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜோஸ்வின் ஆன்லெட். இவர்களுக்கு 9 வயதில் தர்ஷா என்ற மகள் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ேஜாஸ்வின் ஆன்லெட் கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த 4 நாட்களாக அடுத்த தெருவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று வெகுநேரமாகியும் சுதனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால், அவரது அண்ணன் மோகன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகன் அவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சமையல் அறையில் சுதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் சுதன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சுதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story