கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56), கட்டிட தொழிலாளி. இவருக்கு சுந்தரகனி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பரமசிவம் உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாக ஆகவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக பரமசிவம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்திலையில் நேற்று காலையில் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பரமசிவத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story