15 வயது சிறுமியை பெங்களூருக்கு அழைத்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது


15 வயது சிறுமியை பெங்களூருக்கு அழைத்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
x

15 வயது சிறுமியை பெங்களூருக்கு அழைத்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வினோத் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் தற்போது பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்தநிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வினோத் பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த சிறுமி நேற்று முன்தினம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் தனச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியின் செல்போன் டவர் சிக்னலை வைத்து அந்த சிறுமியை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் அளித்த 10 மணி நேரத்தில் சிறுமியை பத்திரமாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story