மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி ஜனவரி மாதத்தில் தொடங்கும்-மத்திய மந்திரி தகவல்


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி ஜனவரி மாதத்தில் தொடங்கும்-மத்திய மந்திரி தகவல்
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று மத்திய மந்திரி கூறினார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.27. ஏக்கர் பரப்பளவில் ரூ.1977.80 கோடியில் உலக தரம்வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக ஆஸ்டின்பட்டியில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையில் நிர்வாக அலுவலகம் செயல்பட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி வி.பி.சிங் பாகேல் நேற்று மாலை எய்ம்ஸ் நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வாசலில் புதியதாக வைக்கப்பட்டு இருந்த அலுவலக பெயர் பலகையை பார்வையிட்டார். பின்னர் முதன்மை பொறியாளர் கர்னல் அலோக்கிடம் கட்டிட வரைபடங்களை பார்வையிட்டு விவரங்களைக் கேட்டு அறிந்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாநில அரசு நிலத்தை ஒப்படைக்க தாமதமானதால் தான் கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதத்தில் ஒப்பந்த பணிகள் நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கட்டிட பணிகள் தொடங்கும். 18 மாதங்களில் முதற்கட்ட பணிகள் நிறைவுபெறும். வெளி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக பிரிந்து மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.நான்காவது கட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி படிப்பார்கள் என நம்புகிறேன்.இந்தியாவிலேயே அதிக தொழில் நுட்ப வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story