சிவகாமிபுரத்தில் குடிநீர் தொட்டி-பாலம் அமைக்கும் பணி
சிவகாமிபுரத்தில் குடிநீர் தொட்டிகள், பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பேரூராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் பொன்செல்வன் கோரிக்கையை ஏற்று, சிவகாமிபுரம் பிரதான சாலை, சாலடியூர் ரோடு, மேலத்தெரு ஆகிய பகுதிகளில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. அத்துடன் சிவகாமிபுரம் நடுத்தெருவில் பாலம் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ்பணிகளை பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், செயல்அலுவலர் மாணிக்கராஜ், கவுன்சிலர் பொன்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வார்டு செயலாளர்கள் ராஜதுரை, சந்திரமோகன், தங்கதுரை, செல்வன், இசக்கி, பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், விஜயன், மாயாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story