ரூ.12 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி


ரூ.12 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
x

ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் சாம்பல் நீர் வெளியேற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியை ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'கலசபாக்கம் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் முன் வைக்கும் கோரிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் 15-வது மாநில நிதிக்குழு திட்டத்தின் மூலமும், சாம்பல் நீர் வெளியேற்று மேலாண்மை திட்டத்தின் மூலமும் இணைந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

அப்போது அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Next Story