இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்


இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
x

கவுல்பாளையத்தில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 72 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கி பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கான கவுல்பாளையத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 1 தொகுப்பிற்கு 4 வீடுகள் வீதம் 72 வீடுகள் 18 தொகுப்புகளாக கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.


Next Story