கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.13 கோடியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்
கிளாம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கிளாம்பாக்கம் அருகே மழை வெள்ள பாதிப்பை தடுக்க 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி ஜி.எஸ்.டி. சாலையின் மேற்கு பகுதியில் 742 மீட்டர் நீளமும், குறுக்கே 65 மீட்டர் நீளமும் கொண்ட அளவில் நவீன முறையில் கால்வாய் அமைக்கப்படுகிறது.
மேலும் மனுநீதி சோழன் தெருவில் மழைநீர் கால்வாய் அகலப்படுத்தப்பட உள்ளதாகவும், கிளாம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை 4 வாரங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story