வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் சாலை, கால்வாய் அமைக்கும் பணி


வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் சாலை, கால்வாய் அமைக்கும் பணி
x

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் சாலை, கால்வாய் அமைக்கும் பணிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வேலூர்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ரூ.50 லட்சத்தில் சாலை மற்றும் மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் இயங்கி வந்த கடைகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட்டில் சாலை, கால்வாய் அமைக்கும் பணியை ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடையும் நாள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர் கேட்டறிந்தனர்.

பின்னர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஒப்பந்தாரரிடம் கூறுகையில், முதற்கட்டமாக சாலை அமைக்கும் பணிகளை முடித்துவிட்டு, அதன் பின்னர் கால்வாய் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவாரத்துக்குள் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், உதவி பொறியாளர் செல்வராஜ், நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தலைவர் எல்.கே.எம்.பி. வாசு மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story