தடுப்புச்சுவர் அமைக்கும் பணி


தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 28 Aug 2023 1:15 AM IST (Updated: 28 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வெட்டுவாடி-தாளூர் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே வெட்டுவாடி, கணபதி நகர், கொட்டங்கரை, தாளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வெட்டுவாடி முதல் தாளூர் வழியாக சுல்த்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை தாளூர் வரை குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மழை பெய்யும் போது குண்டும், குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முதல்வரின் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. முதல் கட்டணமாக சாலையோர தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


Next Story