நரிமணி ஆற்றில் ரூ.30 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி


நரிமணி ஆற்றில் ரூ.30 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி
x

நரிமணி ஆற்றில் ரூ.30 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி புதுக்கடையில் சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை அவர் பார்வையிட்டார். திருக்கண்ணபுரம் ஊராட்சி நரிமணி ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான இடத்தையும், திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரம் பகுதிக்கு இடையே நரிமணி ஆற்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட திட்ட அலுவலர் பெரியசாமி, திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தியாகராஜன், வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story