போலீஸ் பாதுகாப்புடன் அகல ெரயில்பாதை அமைக்கும் பணி


போலீஸ் பாதுகாப்புடன் அகல ெரயில்பாதை அமைக்கும் பணி
x

போலீஸ் பாதுகாப்புடன் அகல ெரயில்பாதை அமைக்கும் பணி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ெரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆறுகாட்டுத்துறை, செண்பகராயநல்லூர் ஆகிய பகுதியில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தேத்தாகுடி தெற்கு பூசாரி தோட்டத்தில் சுரங்கபாதை அமைக்க முடியாது என ெரயில்வே நிர்வாகம் மறுத்தது. இதனால் அந்த பகுதி மக்கள் முன்பு இருந்த ரெயில்வே கேட் பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது தேத்தாகுடி தெற்கு பூசாரி தோட்டத்தில் சுரங்கபாதை அமைக்காமல் ரெயில்பாதை பணி நடைபெற்று வருகிறது. நேற்று திடீரென சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றது. இதனை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ரெயில்வே துறையினர் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அகல ரெயில்பாதைக்கு மண் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பி மாநில நிதியில் இருந்து சுரங்கபாதை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.


Next Story