பள்ளவள்ளி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி

பள்ளவள்ளி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி
x

பள்ளவள்ளி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

பள்ளவள்ளி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பள்ளவள்ளி ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளவள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினார்.

வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான சி.செல்வம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் இளவரசி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story