ரூ.44 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி


ரூ.44 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே ரூ.44 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே ராமநாதபுரம் பஞ்சாயத்து சரவணாபுரத்தில் இருந்து கள்ளியூர் என்ற சண்முகநாதபுரம் வரையிலும் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. புதிய சாலை அமைக்கும் பணிகளை வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர்கள் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story