கட்டுமான தொழில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்


கட்டுமான தொழில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 July 2023 1:30 AM IST (Updated: 10 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

சி.என்.ஐ. என்ற இந்திய கட்டுமான தொழில் நெட்வொர்க் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல்லில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

திண்டுக்கல்

சி.என்.ஐ. என்ற இந்திய கட்டுமான தொழில் நெட்வொர்க் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல்லில் ஆலோசனை கூட்டம், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சி.என்.ஐ. நிறுவனர் உதயகுமார் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், தொழில் வளர்ச்சி, பொருளாதாரநிலை, புதிய விதிமுறைகள், அணுகுமுறைகள் என தொழில் வளர்ச்சியில் புதிய யுக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

இதில் தலைவராக அருள் ஞானபிரகாசம், செயலாளராக ஓபலா பிரேம்குமார், பொருளாளராக மாணிக்கவேல் பழனிசாமி, உறுப்பினர் மேம்பாட்டுக்குழு தலைவராக முகமது சபி அல்லாபக்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து புதிய உறுப்பினர்களுக்கு சி.என்.ஐ. நிறுவனர் உதயகுமார், பி.ஏ.ஐ. திண்டுக்கல் சாப்டர் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். இதில் பார்வதி கல்லூரி தாளாளர் ஸ்ரீதர், தொழிலதிபர் கருணாகரன், மண்டல இயக்குனர்கள் கோபிசன், அருள், திண்டுக்கல் சி.என்.ஐ. நிரந்தர ஆலோசகர்கள் செட்டிநாடு கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி ரவி தியாகராஜன், பி.எம்.எஸ். நிறுவன உரிமையாளர் வெங்கேடசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story