கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்காமல் இருக்க பரிசீலனை; ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்காமல் இருக்க பரிசீலனை செய்யப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கோபி அருகே சுங்கச்சாவடி அமைக்காமல் இருக்க பரிசீலனை செய்யப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சுங்கச்சாவடி
ஈரோட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பெரும்பான்மையான சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்று பிரதமரிடமும், சம்பந்தப்பட்ட துறையின் மத்திய மந்திரியிடமும் கோரிக்கை வைத்து உள்ளோம்.
ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. நாவலூரில் இருந்த மாநில சுங்கச்சாவடி மூலமாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்ததால் அந்த சுங்கச்சாவடியை செயல்படுத்த வேண்டாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அந்த சுங்கச்சாவடி தற்போது செயல்படவில்லை.
பரிசீலனை
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அருகே பாலப்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. அதுகுறித்து பரிசீலினை செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.