'காடு, மரம், ஆறு, நீர்நிலைகளை பாதுகாப்பதே சனாதனம்' - முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
பெரியோர்களை மதிப்பதும், இயற்கையை போற்றிப் பாதுகாப்பதுமே சனாதனம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தி-நகரில் ஹரிஜன் சேவக் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அறக்கட்டளை சார்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, சனாதனம் என்பது பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வந்தது என தெரிவித்தார். பெரியோர்களை மதிப்பது, இயற்கையை போற்றிப் பாதுகாப்பது, காடு, மரம், ஆறு, நீர்நிலைகளை பாதுகாப்பதே சனாதனம் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார். அமைதி மூலமே அனைத்தையும் சாதிக்க முடியும் என்றும், போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story