100 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; இந்து முன்னணி கூட்டத்தில் முடிவு
விநாயகர் சதுர்த்தியன்று நெல்லை மாநகரில் 100 சிலைகளை பிரதிஷ்டை செய்வது என டவுனில் நடந்த இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியன்று நெல்லை மாநகரில் 100 சிலைகளை பிரதிஷ்டை செய்வது என டவுனில் நடந்த இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாநகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நெல்லை டவுனில் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், குருசாமி, பாலமுருகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை 'அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம்' என்ற தலைப்பில் கொண்டாட வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரில் செப்டம்பர் 18-ந் தேதி 100 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, 24-ந் தேதி மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம், செயலாளர்கள் சுடலை, சுரேஷ், விமல், பொருளாளர் மூர்த்தி, துணை தலைவர்கள் ராம செல்வராஜ், ராஜசெல்வம், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் செந்தில் குமார், அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி குருவம்மாள், இந்து வியாபாரிகள் நலச் சங்க மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் விநாயகர் சதுர்த்தி கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.