பிலிக்கல்பாளையம் அருகே திருப்பதி முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்


பிலிக்கல்பாளையம் அருகே திருப்பதி முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

பிலிக்கல்பாளையம் அருகே திருப்பதி முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கடந்த 26-ந் தேதி இரவு கிராம சாந்தி வழிபாட்டுடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி விநாயகர் வழிபாடு, புண்யாகம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். மாலை முதல் கால் யாக பூஜை, வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் திருப்பதி முனியப்பசாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 2-ம் காலையாக பூஜையும், 3-ம் கால பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து திருப்பதி முனியப்ப சாமிக்கு மகா கும்பாபிஷேகமும், மறு அபிஷேகமும், ஆராதனைகளும், மகா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்ப சாமி கோவில் மகா கும்பாபிஷேக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story