பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

இலுப்பநத்தம் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சேலம்

தலைவாசல்

தலைவாசல் அருகே இலுப்பநத்தம் நாட்டார் அக்ரஹாரத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story