சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்:யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்


சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்:யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்
x

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம்

சேலம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் ஆடி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பழமையான இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனால் வருகிற 27-ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்று பாதைகளில் வாகனங்களை இயக்கவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

யாக சாலைகள்

கும்பாபிஷேகம் நடைபெறும் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிற்கும் அனைத்து இடங்களுக்கும் பைப்லைன் மூலமும், டிரோன்கள் மூலமும் புனிதநீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் தற்போது யாக சாலைகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் கூறும் போது, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 23 யாக சாலைகள் மற்றும் 7 கலச தீர்த்தம் வைக்கப்படும் வேதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜகோபுரத்தில் ஏறி கலசத்துக்கு புனிதநீர் தெளிக்கும் வகையில் சாரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி அம்மனை வழிபட்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றனர்.


Next Story