மார்த்தாண்டத்தில்காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டத்தில்காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
குழித்துறை:
எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளிடமிருந்து பெரும் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள கடன்களை மத்திய அரசு திரும்ப வசூலிக்காததை கண்டித்து மார்த்தாண்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு காங்கிரசார் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங் முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story