காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் பிரின்ஸ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
திங்கள்சந்தை,
பொதுத்துறை நிறுவன பங்குகளை அதானி, அம்பானிக்கு முறைகேடாக கொடுத்து பொதுமக்களின் சேமிப்பு பணத்தை வீணடித்து பொருளாதார தேக்க நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியதாகவும், ஏழை மாணவர்களின் கல்விக் கடனை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன்விளை இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பொன். பால்துரை தலைமை தாங்கினார். நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் விக்டர் கென்னடி வரவேற்று பேசினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம், பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாநில பேச்சாளர் அந்தோணி முத்து, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெபஷீலா ஆல்வின், பேராசிரியர் சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர். முடிவில் வில்லுக்குறி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் தாஸ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்டிமாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பெலிக்ஸ் ராஜன், மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் சாமுவேல் சேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜிலியாஸ், வட்டார செயல் தலைவர் ஆல்பர்ட் ஜீவமணி, நுள்ளிவிளை ஊராட்சி உறுப்பினர் மேரி ஸ்டெல்லாபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.