காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்; எம்.எல்.ஏ. உள்பட 120 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முனிரத்தினம் எம்.எல்.ஏ. உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் நேற்று அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மைசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் முன்பு ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் அண்ணாதுரை உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story